வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடிவருகின்றன. இதில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே இவ்விரு அணிகளும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றது. தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி கணக்கைத் தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளதால் முதலிடத்தை தக்கவைக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை.
-
Matchday 🙌
— Bangladesh Cricket (@BCBtigers) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🆚 Afghanistan
🏆 Tri-Nation T20I Tournament
🏏 Third Match
🏟 Sher-e-Bangla National Cricket Stadium
🕑 6:30 PM#BANvAFG #RiseOfTheTigers pic.twitter.com/f9mTEcEoKl
">Matchday 🙌
— Bangladesh Cricket (@BCBtigers) September 15, 2019
🆚 Afghanistan
🏆 Tri-Nation T20I Tournament
🏏 Third Match
🏟 Sher-e-Bangla National Cricket Stadium
🕑 6:30 PM#BANvAFG #RiseOfTheTigers pic.twitter.com/f9mTEcEoKlMatchday 🙌
— Bangladesh Cricket (@BCBtigers) September 15, 2019
🆚 Afghanistan
🏆 Tri-Nation T20I Tournament
🏏 Third Match
🏟 Sher-e-Bangla National Cricket Stadium
🕑 6:30 PM#BANvAFG #RiseOfTheTigers pic.twitter.com/f9mTEcEoKl
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் சவுமியா சர்கார், முஷ்பிகூர் ரஹிம், முஸ்தபிஸுர் ரஹ்மான் என பலம் வாய்ந்ததாகவே உள்ளது.
ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, ஹஸ்ரத்துல்லா ஜசாய், நஜிபுல்லா சட்ரான் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என்பது உறுதி.
அணி விவரம்:
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய், நஜீப் தாராகை, அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, குல்புதின் நைப், ரஷித் கான் (கே), கரீம் ஜனத், ஃபரீட் மாலிக், முஜீப் உர் ரஹ்மான், தாவ்லத் ஷத்ரால் ஷத்ரான் ஷபிக், ஃபஸல் நயாசாய், நவீன்-உல்-ஹக்.
வங்கதேசம்: லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிகூர் ரஹிம், முகமதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாடெக் ஹொசைன், அஃபிஃப் ஹொசைன், முகமது சைபுதீன், தைஜுல் இஸ்லாம், முஸ்தபிஸுர் ரஹ்மான், மகேதி ஹசாத்