ETV Bharat / sports

'அறிமுக ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவது எளிதல்ல' - இஷான் கிஷானை புகழும் வி.வி.எஸ். லக்ஷ்மன்!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான இஷான் கிஷானின் அதிரடியான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் பாராட்டியுள்ளார்.

Not easy to bat in carefree & fearless fashion in your debut match: Laxman on Ishan Kishan

author img

By

Published : Mar 15, 2021, 10:29 PM IST

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை துரத்திய அறிமுக வீரர் இஷான் கிஷான், கேப்டன் விராட் கோலி இணை அதிரடியாக விளையாடி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். மேலும் அறிமுக போட்டியிலேயே அதிரடியாக விளையாடி இஷான் கிஷான் ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கூறுகையில், “இஷான் கிஷானின் அச்சமற்ற பேட்டிங்கை நான் மிகவும் விரும்பினேன். உங்கள் அறிமுக போட்டியில் இப்படி அதிரடியாக பேட்டிங் செய்வது எளிதல்ல.

ஐபிஎல்லில் அவர் சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியதால், அவரால் இப்படி விளையாட முடிகிறது என்று கூறுகிறோம். ஆனால் உண்மையில் அறிமுகப் போட்டியில் நீங்கள் விளையாடும்போது உங்களுக்குப் பதற்றம் இருக்கும். ஆனால் இவரைப் பொறுத்தவரை பதற்றமின்றி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார்” என்று பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான இஷான் கிஷான் தனது முதல் போட்டியில் 32 பந்துகளைச் சந்தித்து நான்கு சிக்சர், ஐந்து பவுண்டரிகள் என 56 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பும்ரா - சஞ்சனா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.