கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றால் கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகின் மிகவும் செல்வாக்கான கிரிக்கெட் வாரியம் என்ற பெயரைப் பெற்ற பிசிசிஐ, தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறாத காரணத்தால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக விளையாட்டு வீரர்காளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமல், ‘கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வது குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரும் நிதிநெருக்கடியில் பிசிசிஐ தற்போது சிக்கியுள்ளது. இருப்பினும் வீரர்களுடைய ஊதியபிடித்தம் குறித்து சிந்திப்பதற்கு பதிலாக, பிசிசிஐயின் உறுப்பினர்கள், அலுவலர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வது குறித்தான ஆலோசனையை மேற்கொண்டுள்ளோம். அதேசமயம் தேவையற்ற செலவுகளை முற்றிலுமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐந்தாவது நாள்களாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் பார்சிலோனா வீரர்கள்!