ETV Bharat / sports

'கேப்டன்சிக்காக எனது ஆட்டத்தை மாற்றப்போவதில்லை' - பென் ஸ்டோக்ஸ்

author img

By

Published : Jun 30, 2020, 6:06 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் கேப்டனாக செயல்பட்டாலும், விளையாட்டு அணுகுமுறையை மாற்ற மாட்டேன் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்

my-style-wont-change-if-given-role-of-captaincy-in-absence-of-joe-root-ben-stokes

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடங்கவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டிற்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால், அவர் இத்தொடரில் பங்கேற்பது கடினம் என்றும், இதனால் இத்தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிளாக் ஒன்றிற்குப் பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், "இங்கிலாந்து அணையின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டாலும், எனது விளையாட்டின் அணுகுமுறையையோ, ஆட்டத்தையோ மாற்றப்போவதில்லை. மாறாக கேப்டனாக என்னால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசிப்பேன்.

மேலும், எனது வழக்கமான பேட்டிங், பந்துவீச்சு திறன்களைப் பயன்படுத்தி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது மட்டுமே என்னுடைய முக்கியக் குறிக்கோளாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகவே செய்துள்ளேன். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன்ஷிப் என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் கௌரவம்" என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டால், ஆண்ட்ரூ ஃப்ளின்டாப்பிற்கு அடுத்து இங்கிலாந்து அணியை வழிநடத்தும் இரண்டாவது ஆல்ரவுண்டர் என்ற பெருமையை ஸ்டோக்ஸ் பெறுவார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.