ETV Bharat / sports

'தோனி, விராட், ரோஹித் ஆகிய மூன்று கேப்டன்களுமே தனித்துவமானவர்கள்!' - தோனியின் திட்டம்

டெல்லி: தோனி, விராட், ரோஹித் ஆகிய மூன்று பேரும் கேப்டன்சியில் தனித்துவமானவர்கள் என முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

msk-prasad-differentiates-between-dhoni-kohli-and-rohit-as-captains

author img

By

Published : May 3, 2020, 2:24 PM IST

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனியின் எதிர்காலம், விராட் கேப்டன்சி எனப் பல்வேறு விஷயங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ''கேப்டன்சி என்று எடுத்துக்கொண்டால் தோனி, விராட், ரோஹித் ஆகிய மூன்று பேருக்கும் தனித்துவமான குணமுண்டு. தனித்துவ பாணியைக் கடைப்பிடிப்பார்கள்.

தோனியைப் பொறுத்தவரையில் கேப்டன் கூல். அவர் மனதில் என்ன வைத்துள்ளார் என்பதை அவர் சொல்லாமல் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. விராட் கோலியைப் பொறுத்தவரையில் அவருக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிடுவார். ரோஹித் ஷர்மா எப்போதும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நினைப்பார். ஒவ்வொரு வீரரையும் அவரது நிலையிலிருந்து சிந்திப்பார்.

உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் தோனி சிலகாலம் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்க வேண்டும் என நினைத்தார். அதனால் மட்டுமே நாங்கள் ரிஷப் பந்தை அணியில் தேர்வுசெய்தோம். இப்போது அவரது இடத்திற்கு கே.எல். ராகுல் வந்துள்ளார். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடினார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடந்தால் தோனி நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறேன். சில விண்டேஜ் தோனியை பார்க்க ஆசையாக உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் ஐபிஎல் நடக்குமா என்பது சந்தேகமே'' என்றார்.

இதையும் படிங்க: தோனி தான் எனக்கு வழிகாட்டி - ரிஷப் பந்த்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.