ETV Bharat / sports

2007 டூ 2013 - தோனி கேப்டன்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்

2007ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் நடுவில் தோனியின் கேப்டன்சியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்று முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 28, 2020, 5:49 PM IST

ms-dhoni-used-to-control-bowlers-in-2007-but-started-trusting-them-in-2013-became-calmer-irfan-pathan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தோனி, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், தோனி பற்றி வரும் செய்திகளே அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் இந்திய ஸ்விங் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் 2007ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் நடுவில் தோனியின் கேப்டன்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். 2007ஆம் ஆண்டில் தான் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதேபோல் 2013ஆம் ஆண்டில் கேப்டன்சியின் முக்கியமான நாள்களில் இருந்தார்.

தோனி
தோனி

இந்நிலையில், இந்த வித்தியாசம் குறித்து பேசிய இர்ஃபான் பதான், ''முதன்முறையாக கேப்டன்சி கிடைக்கும்போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் 2007ஆம் ஆண்டு தோனி கேப்டன்சியின்போது நடக்கும் டீம் மீட்டிங் ஐந்து நிமிடங்கள் தான் நடக்கும்.

2007ஆம் ஆண்டு அவர் கீப்பங் செய்யும் இடத்திலிருந்து பந்துவீச்சாளரிடம் ஓடி வந்து அதிகமான ஆலோசனைகள் கொடுப்பார். என்ன மாதிரியான பந்துகள் வீச வேண்டும் எனக் கூறிவிடுவார். ஆனால் 2013ஆம் ஆண்டில் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்.

இர்ஃபான் பதான்
இர்ஃபான் பதான்

மிதவேகப் பந்துவீச்சாளர்கள் மீதும், சுழற்பந்து வீச்சாளர்கள் மீதும் நம்பிக்கைக் கொண்டது 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது தான் என நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அவர் நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.