ETV Bharat / sports

தோனிதான் சிறந்த கால்பந்து வீரர்: ரோஹித் ஷர்மா! - சிறந்த கால்பந்து வீரர் தோனி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் தோனிதான் சிறந்த கால்பந்து வீரர் என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

ms-dhoni-is-number-one-football-player-in-indian-team

author img

By

Published : Dec 14, 2019, 3:51 PM IST

கால்பந்து விளையாட்டின் உலக புகழ்பெற்ற லா லீகா கால்பந்து தொடரை இந்தியாவில் விளம்பரப்படுத்தும் நோக்கில், அதன் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். லா லீகா தொடரின் விளம்பரத் தூதராக முதல்முறையாக ஒரு கிரிக்கெட் வீரர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரோஹித் ஷர்மா, ”சிறுவயதில் இருந்தே ரியல் மேட்ரிட் அணியின் பெரும் ரசிகன் நான். தற்போது லா லீகா தொடரின் விளம்பரத் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த கால்பந்து வீரர் தோனிதான். ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அனைத்து கால்பந்து ஆட்டங்களையும் பார்ப்பார்கள். அதில் ஒருசில வீரர்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

ஸ்பெயினில் கால்பந்து எப்படி கொண்டாடப்படுகிறதோ, அதேபோல்தான் இந்தியாவில் கிரிக்கெட் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தெருவிலும் இந்தியாவில் கிரிக்கெட் ஆடி வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கால்பந்து வீரர்களுக்கு தேவையான சிறந்த அடிப்படைகளை கொடுத்து வருகிறது.

ஐபிஎல் தொடர், கிரிக்கெட்டுக்கு பங்காற்றி வருவதுபோல் இந்தியாவின் கால்பந்திற்கு ஐஎஸ்எல் தொடர் பங்காற்றுகிறது. நிச்சயம் கால்பந்து இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: சென்னை தாஜ் ஹோட்டல் ஊழியரைச் சந்திக்க விரும்பும் லிட்டில் மாஸ்டர்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/ms-dhoni-is-number-one-football-player-in-indian-team/na20191212225347231

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.