ETV Bharat / sports

ஹாட்ரிக் எடுத்தது குல்தீப்தான் ஆனா ரெக்கார்ட் முகமது சமி கையில்

author img

By

Published : Dec 18, 2019, 11:07 PM IST

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 2019ஆம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார்.

mohammed shami, மொகம்மது சமி
mohammed shami

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித், ராகுல், ஷ்ரேயாஸ், பந்த் உள்ளிட்டோரின் அதிரடியால் 387 ரன்களை எட்டியது.

இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் ஹோப் - பூரான் இணையின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டும் எழுச்சி கண்டது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் குல்தீப் ஹாட்ரிக்கும், முகமது சமி மூன்று, ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, 2019ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை அச்சுறுத்திய பூரான் விக்கெட்டை சமி கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டை முதல் பந்திலேயே டக்-அவுட்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனையையும் ஏற்படுத்தினார்.

இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான கீமோ பாலின் விக்கெட்டையும் சமி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் 20 போட்டிகளில் விளையாடியுள்ள சமி 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் 38 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

mohammed shami, மொகம்மது சமி
சமி

இந்திய அணிக்கு மற்றொரு ஒருநாள் போட்டி எஞ்சியுள்ளது. அதேவேளையில் நியூசிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் சமி மேலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றும்பட்சத்தில் அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்பதால் அவர் இந்தாண்டை சாதனையுடன் நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள சமி முன்னதாக உலகக் கோப்பைத் தொடரில் நான்கு போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதுவே முதல்முறை...! இரண்டு கேப்டன்கள் செய்த மோசமான சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.