ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, பிரிஸ்பேன் ஹீட் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு ஸ்டாய்னிஸ் 16 ரன்களிலும் ஹில்டன் 18 ரன்களிலும் ஹேண்ட்ஸ்கோம்ப் 20 ரன்களிலும் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 23 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். மேலும் அவர் 39 பந்துகளில் 83 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
-
83 off 39. Unbelievable. pic.twitter.com/vphZGhnab4
— Melbourne Stars (@StarsBBL) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">83 off 39. Unbelievable. pic.twitter.com/vphZGhnab4
— Melbourne Stars (@StarsBBL) December 20, 201983 off 39. Unbelievable. pic.twitter.com/vphZGhnab4
— Melbourne Stars (@StarsBBL) December 20, 2019
இதன்மூலம் மெல்போர்ன் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. பிரிஸ்பேன் அணி சார்பில் ஜாகிர் கான், பென் கட்டிங் எனப் பந்துவீசிய அனைத்து பவுலர்களுமே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு டாம் பான்டன் அதிரடியான தொடக்கத்தை தந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 36 பந்துகளில் 64 ரன்களை விளாசி பெவிலியன் திரும்பினார்.
ஆனால், அணியின் கேப்டன் கிறிஸ் லின், மேக்ஸ், பென் கட்டிங் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால், பிரிஸ்பேன் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எடுத்தது. மெல்போர்ன் அணி சார்பில் ஸாம்பா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
-
Not sure what @StarsBBL fans will enjoy more. This scoreline, or how glorious Adam Zampa's mullet looks in the photo 😍#BBL09 pic.twitter.com/XYPjNDDan3
— KFC Big Bash League (@BBL) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Not sure what @StarsBBL fans will enjoy more. This scoreline, or how glorious Adam Zampa's mullet looks in the photo 😍#BBL09 pic.twitter.com/XYPjNDDan3
— KFC Big Bash League (@BBL) December 20, 2019Not sure what @StarsBBL fans will enjoy more. This scoreline, or how glorious Adam Zampa's mullet looks in the photo 😍#BBL09 pic.twitter.com/XYPjNDDan3
— KFC Big Bash League (@BBL) December 20, 2019
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி, இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:'எங்களிடம் போதிய பணம் இல்லாததால் எங்களால் அதிக வீரர்களை எடுக்க முடியவில்லை' - சிஎஸ்கே பயிற்சியாளர் ஃப்ளெமிங்!