இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் தரம்சாலாவில் நடக்கவிருந்தது.
ஆனால், போட்டி தொடங்குவதற்கு வெகுநேரம் முன்பிருந்தே கடுமையான மழை பெய்தது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து நண்பகல் 2.45 மணிக்கு, 20 ஓவர்கள் போட்டியாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் மழை குறுக்கீட, மாலை 5.20 மணிக்கு அடுத்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போதும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்களிடையே சோகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அடுத்த இரண்டு போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடைசெய்ததா மஹாராஷ்டிரா?