ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஃபர்குசன் தலைமையிலான சிட்னி தண்டர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணியின் தொடக்க வீரர் ஃபிளெட்சர் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் - மேக்ஸ்வெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன் கணக்கை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
அதன்பின் 61 ரன்களை எடுத்திருந்த ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து 39 ரன்களுடன் மேக்ஸ்வெல்லும் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்களும், வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில், உஸ்மான் கவாஜா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபர்குசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஃபர்குசன் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹேல்ஸும் 46 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடந்து வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
-
2 wins from 2 games to start #BBL10!
— Melbourne Stars (@StarsBBL) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A fantastic performance from the entire team, defeating the Thunder by 22 runs. 💚 #TeamGreen pic.twitter.com/UQcU3UGWk6
">2 wins from 2 games to start #BBL10!
— Melbourne Stars (@StarsBBL) December 12, 2020
A fantastic performance from the entire team, defeating the Thunder by 22 runs. 💚 #TeamGreen pic.twitter.com/UQcU3UGWk62 wins from 2 games to start #BBL10!
— Melbourne Stars (@StarsBBL) December 12, 2020
A fantastic performance from the entire team, defeating the Thunder by 22 runs. 💚 #TeamGreen pic.twitter.com/UQcU3UGWk6
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மெல்போர்ன் அணியின் ஆடம் ஸாம்பா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:கரோனாவில் இருந்து குணமடைந்த உலக சாம்பியன்