ETV Bharat / sports

'பந்துவீச்சாளர்களுக்கு மாஸ்க் மாட்டிவிடுங்கள்' - ஐசிசியை கிண்டலடித்த மிஸ்பா - பந்துகளில் உமில்நீர் பயன்படுத்து குறித்து மிஸ்பா கருத்து

பந்துவீச்சாளர்கள் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு மாஸ்க் வழங்குங்கள் என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும் தேர்வுக்குழுத் தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

Make bowlers wear mask to stop them from using saliva on ball: Misbah-ul-Haq

author img

By

Published : May 26, 2020, 11:21 PM IST

கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளை உபயோகிக்க ஏதுவாக, அதன் மீது பந்துவீச்சாளர்கள் உமிழ்நீர் தடவுவது வழக்கம். அவ்வாறு தடவுவதால் பந்துகளை ஸ்விங் செய்வதற்கு உதவும். இதனால் பந்துகளை வைத்து இன்னும் சிறிது நேரம் ஸ்விங் செய்யலாம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பந்துகளில் உமிழ் நீரை பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

இதற்கு பல்வேறு வீரர்களும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பந்துகள் மீது வீரர்கள் உமிழ்நீர் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், தேர்வுக்குழுத் தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில், "கிரிக்கெட் விளையாடிவந்த ஆரம்ப காலங்களிலிருந்தே பந்துவீச்சாளர்கள் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதை பழக்கமாகவே வைத்துள்ளனர். அதனால் தற்போது இந்தப் பழக்கத்தை மாற்றுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

புதிய கட்டுப்பாட்டுகளைப் பின்பற்ற வேண்டும் என வீரர்கள் மனதில் வைத்திருந்தாலும் அவர்களுக்கே தெரியாமல் சில சமயங்களில் இயல்பாக பந்துகளில் உமழ்நீர் பயன்படுத்தத் தோன்றும்.

இதைத் தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பந்து வீச்சாளர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினால் அவர்களால் பந்துகளில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் தடுக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: உமிழ்நீர் குறித்து ஐசிசி விதித்த தடை இடைக்கால நடவடிக்கை’ - அனில் கும்ளே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.