ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது, பகலிரவு போட்டியாக பெர்த்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மர்னுஸ் லபுசாக்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த அவர் அரைசதமடித்து அசத்தினார். பின் அரைசதத்தை நெருங்கியகொண்டிருந்த வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்மித்தும் 43 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
-
He's in some serious form.
— ICC (@ICC) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Another Test century for Marnus Labuschagne 💯 #AUSvNZ pic.twitter.com/PspC1ZDXH4
">He's in some serious form.
— ICC (@ICC) December 12, 2019
Another Test century for Marnus Labuschagne 💯 #AUSvNZ pic.twitter.com/PspC1ZDXH4He's in some serious form.
— ICC (@ICC) December 12, 2019
Another Test century for Marnus Labuschagne 💯 #AUSvNZ pic.twitter.com/PspC1ZDXH4
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது மூன்றாவது டெஸ்ட் சத்ததைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 248 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் லபுசாக்னே 110 ரன்களுடனும், ட்ராவிஸ் ஹெட் 11 ரன்கலுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க:சேப்பாக்கம் மைதான ஒப்பந்தம் 21 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!