உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்ததையடுத்து வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. வங்கதேச அணி, முதல் மற்றும் இரண்டாம் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியிடம் வீழ்ந்தது. இதனையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்று வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த வெற்றியை இலங்கை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர். இலங்கை வீரர் குசால் மென்டிஸ் தன் சக வீரருடன் இருசக்கர வாகனத்தில் மைதானத்தைச் சுற்றி வந்தார். அப்போது எதிர்பாரா விதமாக வாகனம் சறுக்கி இருவரும் கீழே விழுந்தனர். அதன்பின், சக வீரர்களும் மைதான ஊழியர்களும் குசால் மென்டிஸ்ஸை தூக்கிவிட்டனர். மென்டிஸ்க்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மென்டிஸ் நேற்றைய போட்டியில் 54 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.