இது குறித்து அவர் கூறுகையில், "கோலி சிறந்த வீரர்தான். அவர் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்தாலும், ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் பேட்டிங் செய்ய வந்தாலே தொலைக்காட்சியை ஆஃப் செய்யாமல் அவரது ஆட்டத்தை ரசிப்பேன். அவரது சிறப்பான ஷாட்டுகளைப் பார்ப்பது எனக்கு திருப்திகரமாக உள்ளது.0
இந்தியாவில் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலமானது. அவர்கள் எங்களைப் போல் இல்லாமல் சிறந்த வீரர்களை எப்போதும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். சுனில் கவாஸ்கர், சச்சின் ஆகியோரது வரிசையில் தற்போது கோலியும் இணைந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
அப்பாஸ் பாகிஸ்தான் அணிக்காக 78 டெஸ்ட் போட்டிகளில் 12 சதம் உட்பட 5,062 ரன்களும் அதேபோல் 62 ஒருநாள் போட்டிகளில் 7 சதம் உட்பட 2,572 ரன்களும் அடித்துள்ளார். கடந்த ஆண்டில் ரோஹித் சர்மாவை விடுத்து இந்திய அணியின் வெற்றிகளை எழுதிவிட முடியாது. சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், உலகக்கோப்பைத் தொடரில் 5 சதம், அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 2,442 ரன்கள் என 2019ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு சிறந்த வருடமாக அமைந்தது கவனத்துக்குரியது.
இதையும் படிங்க: நான் சொல்வதை விராட் கோலி ஏற்றுக்கொள்வார்’ - ரோஹித் சர்மா