இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரானது 12 சீசன்களைக் கடந்து தற்போது 13ஆவது சீசனுக்குத் தயாராகிவருகிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல்-இல் பங்கேற்கும் அணிகள் தங்களது பயிற்சியாளர்கள் முதற்கொண்டு பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது.
அந்த வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது அந்த அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் மூன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸியையும், பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸையும் நியமித்துள்ளது.
-
🙌 Welcome Chief Mentor @DavidHussey29, and @kylemills79, our bowling coach, as they join hands with Head Coach @Bazmccullum for #IPL2020 🔥
— KolkataKnightRiders (@KKRiders) October 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
"They bring a wealth of experience as professionals, and are terrific individuals." - @VenkyMysore 💜#KorboLorboJeetbo pic.twitter.com/JMywu26hVc
">🙌 Welcome Chief Mentor @DavidHussey29, and @kylemills79, our bowling coach, as they join hands with Head Coach @Bazmccullum for #IPL2020 🔥
— KolkataKnightRiders (@KKRiders) October 5, 2019
"They bring a wealth of experience as professionals, and are terrific individuals." - @VenkyMysore 💜#KorboLorboJeetbo pic.twitter.com/JMywu26hVc🙌 Welcome Chief Mentor @DavidHussey29, and @kylemills79, our bowling coach, as they join hands with Head Coach @Bazmccullum for #IPL2020 🔥
— KolkataKnightRiders (@KKRiders) October 5, 2019
"They bring a wealth of experience as professionals, and are terrific individuals." - @VenkyMysore 💜#KorboLorboJeetbo pic.twitter.com/JMywu26hVc
இவர்கள் இருவரும் தற்போது கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலமுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்புதான் கொல்கத்தா அணி அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான பிரண்டன் மெக்கலமை நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இந்திய ஜோடி!