நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுத்தோறும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருதுகளை வழங்குகிறது. அந்த வகையில், 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ரிச்சர்டு ஹாட்லி விருதினை அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியமன்சன் தட்டிச் சென்றுள்ளார். அதைத்தவிர, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார்.
அவர் 2018ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 801 ரன்களை குவித்தார். அதன் பலனாக, 2018 டிசம்பர் மாதத்தில் வெளியான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளை பெற்ற முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதைத்தொடர்ந்து, சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர் விருதை நியூசிலாந்து அணியின் ரோஸ் டெய்லர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றார். இதையடுத்து, சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை அந்த அணியின் முன்ரோ தட்டிச் சென்றார்.
இதேபோல், மகளிர் பிரிவில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனை விருதை, அந்த அணியின் அமிலியா கெர்க் பெற்றுள்ளார்.