நியூசிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமானவர் கேன் வில்லியம்சன். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றது. இருப்பினும் பவுண்டரி கணக்கு அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கேன் வில்லியம்சன் தனக்கும் தனது மனைவி சாரா ரஹீமுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைக்குத் தந்தையான வில்லியம்சனுக்கு கிர்க்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர் குமார், ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Congratulations to Kane Williamson and Sarah on being blessed with a baby girl 👨👩👧🧡#SRHFamily #OrangeArmy #KeepRising pic.twitter.com/cvnzQEqhqK
— SunRisers Hyderabad (@SunRisers) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to Kane Williamson and Sarah on being blessed with a baby girl 👨👩👧🧡#SRHFamily #OrangeArmy #KeepRising pic.twitter.com/cvnzQEqhqK
— SunRisers Hyderabad (@SunRisers) December 16, 2020Congratulations to Kane Williamson and Sarah on being blessed with a baby girl 👨👩👧🧡#SRHFamily #OrangeArmy #KeepRising pic.twitter.com/cvnzQEqhqK
— SunRisers Hyderabad (@SunRisers) December 16, 2020
முன்னதாக மனைவியின் பிரசவத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வில்லியம்சன் விலகினார். மேலும் நாளை நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்திலும் வில்லியம்சன் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான தேதி அறிவிப்பு!