இந்திய அணியின் ஃபீல்டிங் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது முகமது கைஃப் தான். தனது அபாரமான ஃபீல்டிங்கால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். மேலும் 2000ஆவது ஆண்டு இவரது தலைமையிலான அண்டர்19 இந்திய அணி, முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் ஆஸ்திரேலிய அணியுடனான நெட்வெஸ்ட்(Netwest) தொடரின் போது 326 என்ற இலக்கை யுவராஜ் சிங்குடன் இணைந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தவர்.
இதுவரை இந்திய அணிக்காக 125 ஒருநாள், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள கைஃப்ம், 3337 ரன்களை எடுத்துள்ளார். அதன்பின் 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த கைஃப் 2011ஆம் ஆண்டு பூஜா எனபவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று தங்களது ஒன்பதாம் ஆண்டு திருமணவிழாவை கொண்டாடினர். இதையடுத்து, இவர் ட்விட்டர் பக்கத்தில், அவரது மனைவி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
Been locked down with this one for 9 years now 😉#HappyAnniversary, Pooja. This has been my life’s best partnership! ❤️🤗 pic.twitter.com/m6Mau0uCmJ
— Mohammad Kaif (@MohammadKaif) March 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Been locked down with this one for 9 years now 😉#HappyAnniversary, Pooja. This has been my life’s best partnership! ❤️🤗 pic.twitter.com/m6Mau0uCmJ
— Mohammad Kaif (@MohammadKaif) March 25, 2020Been locked down with this one for 9 years now 😉#HappyAnniversary, Pooja. This has been my life’s best partnership! ❤️🤗 pic.twitter.com/m6Mau0uCmJ
— Mohammad Kaif (@MohammadKaif) March 25, 2020
அதில், “இவருடன் நான் தனிமைப்படுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் பூஜா. இவர் தான் எனது வாழ்வின் சிறந்த பார்ட்னர்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:படம் பாருங்க... பாட்டு கேளுங்க... ஆனா வீட்ல மட்டுமே இருங்க - ஹிமா தாஸ்!