ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழும் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, தான் டெஸ்ட் போட்டிகளிலும் சிறந்த தொடக்க வீரர் என்பதை தென் ஆப்பிரிக்கா தொடரில் நிரூபித்துக்காட்டியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியின் மூலம், ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்த அவர், இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். பலரும் இவரது ஆட்டத்தைப் பாராட்டி வந்தனர்.
-
I think it’s fair to say he’s started ok 😳 https://t.co/a4oOGmIeIy
— Jimmy Neesham (@JimmyNeesh) October 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I think it’s fair to say he’s started ok 😳 https://t.co/a4oOGmIeIy
— Jimmy Neesham (@JimmyNeesh) October 7, 2019I think it’s fair to say he’s started ok 😳 https://t.co/a4oOGmIeIy
— Jimmy Neesham (@JimmyNeesh) October 7, 2019
இந்த நிலையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் ஓப்பனிங் ஆட்டத்திறன் குறித்து, நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமிடம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு ஜிம்மி நீஷம், நியாயமாக சொல்லவேண்டுமென்றால், ஓ.கேவாகத்தான் அவர் ஓப்பனிங்கைத் தொடங்கியுள்ளார் என தனது பதிவில் பதிலளித்திருந்தார். இதையடுத்து, ஜிம்மி நீஷத்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தனது ஆட்டத்திறன் மூலம் ஜிம்மி நீஷமிற்கு ரோஹித் ஷர்மா பதில் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.