ETV Bharat / sports

'மீண்டும் அணியில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த வெகுமதி' - மார்க்கஸ் ஸ்டோனிஸ்!

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் கிடைத்தது எனக்கு கிடைத்த வெகுமதி என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.

It's a nice reward to be back in the squad: Marcus Stoinis

author img

By

Published : Aug 30, 2020, 4:12 PM IST

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்காக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடர் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் 21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி, தனியார் ஜெட் விமானம் மூலம் இங்கிலாந்து வந்தடைந்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் கடந்த ஓராண்டாக இடம் பிடிக்காமல் இருந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ், தற்போது மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளதை தனக்கு கிடைத்த வெகுமதியென தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்டோனிஸ், ‘கடந்த ஓராண்டு காலமாக ஆஸ்திரேலியாவின் தேசிய அணியில் இடம்பெறாமலிருந்தது சில மாற்றங்களை என்னுள் கொண்டு வந்தது. அதன்படி எனது அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்யவிரும்பினேன். தனித்திறன் படைத்த வீரராக என்னை மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

அதன் மூலம் எனது பந்துவீச்சு, பேட்டிங் என இரு பிரிவிலும் என்னை தயார்படுத்தி வந்தேன். அதற்கு கிடைத்த வெகுமதியாக நான் தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் 21 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி:

ஆரோன் பின்ச் (கேப்டன்), ஹான் அப்பாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹெசல்வுட், மார்னஸ் லபுசானே, நாதன் லயன், மிட்சல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

இதையும் படிங்க:பயிற்சிக்குத் திரும்பிய விராட் கோலி அணியினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.