ETV Bharat / sports

இர்ஃபான் ட்விட்டுக்கு பதிலளித்த ஹர்பஜன்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானின் ட்விட்டர் பதிவுக்கு, முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலானது.

Irfan pathan tweet on age factor agrees by harbhajan

author img

By

Published : Oct 3, 2020, 8:42 PM IST

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் “வயது என்பது ஒரு எண் மட்டுமே. ஆனால் ஒரு சிலருக்கு அது வெளியேற்று வதற்கான காரணம்...” என்று பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்ட முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், “1,00,00,000 விழக்காடு நீங்கள் சொல்வது உண்மையானது இர்ஃபான் பாதான்” என்று பதிலளித்துள்ளார்.இவர்களது ட்விட்டர் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பெங்களூரு அணிக்கு 155 ரன்கள் இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.