உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் என்ற எளிய இலக்கை கூட அடிக்க முடியாமல் போராடி வருகிறது. முதல் மூன்று விக்கெட்களை 1 ரன்னில் கொடுத்து அதிர்ச்சியளித்த இந்திய அணியின் மிடில் வரிசையும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்துள்ளது.
இளம் வீரர்கள் பண்ட் மற்றும் பாண்ட்யா 32 ரன்கள் அடித்து, ஆறுதல் அளித்தாலும் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர். லீக் போட்டியில் வெற்றிநடைப் போட்ட இந்திய அணிக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
களத்தில் தோனி மட்டும் நின்று தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். அவரும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தால் இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்து விடும். நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று விடும்.
இந்த போட்டியில் கடைசி வரையில் நின்று ஆடி இந்திய அணியை வெற்றிப் பெறச் செய்து, சமீப காலமாக தன் மீதான எதிர் விமர்சனங்களுக்கு தோனி முற்றுப்புள்ளி வைப்பாரா என்று அவரது தீவிர ரசிகர்கள் பெரிய ஆவலில் உள்ளனர்.