ETV Bharat / sports

ஆஸி., தொடருக்குத் தயாராகும் இந்திய அணி! - மூன்று வடிவிலான கிரிக்கெட்

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடருக்கு, இந்திய அணியின் பயிற்சியாளர், அணி ஊழியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுள்ளனர்.

India's Test team & support staff to join others in UAE ahead of Australia tour

author img

By

Published : Oct 25, 2020, 4:16 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது மீண்டும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அதேசமயம் இந்த ஆண்டு இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் இத்தொடருக்கான தற்காலிக அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் ஹனுமா விஹாரி, சட்டேஸ்வர் புஜாரா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி ஊழியர்கள் என அனைவரும் இன்று(அக்.25) ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

ஏனெனில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குத் தயாராவார்கள். இதன் காரணமாகவே, பயிற்சியாளர்கள் மற்றும் அணி ஊழியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுள்ளனர்.

மேலும் இத்தொடருக்கான வீரர்களை பிசிசிஐ இன்னும் அறிவிக்காத நிலையில், அடுத்த வாரம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனைக் கூட்டம் நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தின்போது வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலம், தங்குமிடம், பயிற்சி மைதானங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:"தீப்பெட்டி தொழிலாளி மகன் டூ இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.