ETV Bharat / sports

ஜன.27இல் சென்னை வரும் இந்திய அணி! - நடராஜன்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜனவரி 27ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளனர்.

Indian cricketers to assemble in Chennai on Jan 27

author img

By

Published : Jan 24, 2021, 6:55 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. இதன் முதல் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.

இந்த டெஸ்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் வெவ்வேறு நகரத்தில் இருந்து வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் 27ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். வீரர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பின் இங்கிலாந்து அணி வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதி சென்னை வருகை தரவுள்ளனர். ஆனால் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியா வரவுள்ள ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் முன்பாகவே இந்தியா வந்தடைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தனியார் சொகுசு விடுதியில் (லீலா பேலஸ்) தங்கவைக்கப்படவுள்ளனர்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.

இதையும் படிங்க: நடராஜன் உள்ளிட்ட ஆறு இளம் வீரர்களுக்கு காரை பரிசாக அறிவித்த ஆனந்த் மகேந்திரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.