ETV Bharat / sports

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக இந்திய அணி - india vs bangladesh

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

test
author img

By

Published : Oct 29, 2019, 8:07 PM IST

இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இந்தியாவுடன் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரிலும் இரண்டாவது போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

ganguly
கங்குலி

இதனிடையே இன்று பிசிசிஐ புதியத் தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெறும் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் பிசிசிஐ பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்தலாம் என்று பரிசீலித்திருந்தது. இதனனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்காமல் இருந்ததால் இதில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று வங்கதேச கிரிக்கெட் வாரியம்(பிசிபி) பிசிசிஐயின் பரிந்துரையை ஏற்றதையடுத்து இந்த புதிய முடிவு வெளியாகியுள்ளது.

இந்த மாற்றம் ஒரு சிறந்த முன்னேற்றம் என்று கூறிய கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற மாற்றங்கள் தேவை என்றும், பகல் இரவு போட்டிகள் நடத்த ஒப்புக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி என்றும் தெரிவத்தார்.

மேலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேன் மெக்ராத் அறக்கட்ளையுடன் இணைந்து மார்பக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அப்போட்டியில் வீரர்கள் பிங்க் நிற தொப்பியை அணிவார்கள் என்றும் ஒலிம்பிக் சாதனையாளர்கள் அபினங் பிந்த்ரா, மேரி கோம், பி.வி. சிந்து உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை கௌரவிக்க உள்ளதாகவும் கங்குலி தெரிவித்தார்.

பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்டது. எனினும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியா அதற்கு தயாராகியுள்ளது.

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கங்குலி இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு அங்கமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்திய கிரிக்கெட் பல மாற்றங்களை காண இருப்பது இந்த அறிவிப்பிலே தெளிவாகியுள்ளது.

test
இந்திய டெஸ்ட் அணி

டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி வங்கதேச தொடரிலும் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Intro:Body:

Day-Test Match Confirmed against Bangladesh

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.