ETV Bharat / sports

நியூசி., ஒருநாள் தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை காலை நடக்கவுள்ளது.

india-vs-new-zealand-second-odi-match-preview

author img

By

Published : Feb 7, 2020, 5:47 PM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதனிடையே நாளை காலை இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் - ரோஹித் காயம் காரணமாக வெளியேறியதால் இளம் வீரர் ப்ரித்வி ஷா - மயாங்க் இணை மீண்டும் களமிறங்கவுள்ளது. கடந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் இருவரும் வெளியேறினர். இந்தப் போட்டியில் நிச்சயம் அந்த தவறு நடக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை.

விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பும்ராவைக் கடந்து மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிக்கனமாக பந்துவீச வேண்டும். ஷமி, தாகூர், குல்தீப் ஆகியோர் தாராளமாக ரன்களை வாரி வழங்குவதால் பெரிய ஸ்கோர் எடுத்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போகிறது. டி20 போட்டிகளில் சிறப்பாக வீசிய சாஹல் அணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் வில்லியம்சன் இல்லாத காரணத்தால் இந்த ஆட்டத்திலும் லாதம் தான் அணியை வழிநடத்தவுள்ளார். கடந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சை நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், லாதம் ஆகியோர் ஸ்வீப் ஷாட் மூலம் எளிதாக சமாளித்து பவுண்டரிகளாக விளாசினர். இந்தப் போட்டியிலும் அவர்களின் சிறப்பான ஃபார்ம் தொடர்ந்தால் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி 2-0 என பதிலடி கொடுக்கலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, சாண்ட்னர் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக பந்துவீசுகின்றனர். அவரின் சுழற்பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சில நேரங்களில் அச்சுறுத்தலாக அமைகிறது. வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டிம் சவுதி, பென்னட், கிராண்ட்ஹோம், நீஷம் ஆகியோர் இதுவரையிலும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சீனியர் பந்துவீச்சாளர் டிம் சவுதியின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களிடம் சுத்தமாகவே எடுபடவில்லை.

பயிற்சியில் நியூசி., வீரர்கள்
பயிற்சியில் நியூசி., வீரர்கள்

நாளையப் போட்டியில் இரு அணிகளிலும் பெரிதாக எந்த வீரர்களும் மாற்றப்படமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை தக்கவைக்கும் முயற்சியில் இந்திய அணியும், டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் தீவிரமாக செயல்படும் என்பதால் நாளைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ், ஸ்டீவ் ஸ்மித், கோலி, லபுசானே... சச்சின் மனம் திறப்பு!

Intro:Body:

India vs New Zealand Second Odi Match Preview

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.