நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டிக்கு பின் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்திய அணியின் இன்றைய வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கியக் காரணம்.
அவர்களாகவே முன்வந்து ஆட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்தினர். நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு வீசப்பட்ட இடங்கள், அவர்களை ரன் குவிக்கவிடாமல் தடுத்தது. அது அணிக்கு மிக உதவியாகவும் இருந்தது.
இந்தப் பிட்சை பார்த்தபோது 160 ரன்கள் வரை குவிப்பார்கள் என எண்ணினேன். ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் 132 ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. பிட்சின் தன்மைக்கேற்ப எவ்வாறு ஃபீல்டிங் செய்ய வேண்டும் என இன்று தெரிந்தது. பந்துவீச்சில் வழக்கம்போல் சாஹல், பும்ரா, ஜடேஜா அபாரமாகச் செயல்பட்டனர். கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறந்த பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவியுள்ளது'' என்றார்.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி வரும் 29ஆம் தேதி நடக்கவுள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கண்ணீரோடு வெளியேறிய 15 வயது வீராங்கனை கோகோ; ரசிகர்கள் சோகம்!