ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் ஏ தொடர்: கெத்து காட்டிய  இந்திய 'ஏ' அணி - மனிஷ் பாண்டே

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய ஏ அணி 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஏ தொடர்: கெத்துக்காட்டிய  இந்திய ஏ அணி
author img

By

Published : Jul 22, 2019, 6:43 PM IST

மனிஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய ஏ அணி, நான்காவது ஒருநாள் போட்டியில் 5 ரன்னில் போராடித் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூதர்ஃபோர்டு 65, தொடக்க வீரர் சுனில் அம்ப்ரிஸ் 61 ரன்களை அடித்தனர். இந்திய அணி சார்பில் தீபக் சஹார், நவ்தீப் சைனி, ராகுல் சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

India A
ருதுராஜ் ஜெய்க்வாட்

இதைத்தொடர்ந்து, 237 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் ஜெக்வாட், ஷுப்மன் கில் அதிரடியில் 33 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 40 பந்துகளில் எட்டு பவுண்ட்ரி, மூன்று சிக்சர் என 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், சிறப்பாக பேட்டிங் செய்த ருதுராஜ் சதம் விளாசும் வாய்ப்பை ஒரு ரன்னில் நழுவ விட்டார். 89 பந்துகளில் 11 பவுண்ட்ரி, மூன்று சிக்சர் என அவர் 99 ரன்களில் அவுட் ஆனார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய ஏ அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.