ETV Bharat / sports

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாய்க்கு மாற்றம்! - ஆசிய கோப்பை போட்டி

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

India, Pakistan to play Asia Cup in Dubai: Ganguly

author img

By

Published : Feb 29, 2020, 1:52 AM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் இருநாட்டு ரசிகர்கள் மத்தியிலும் எப்போதும் ஒரு பரபரப்பு இருப்பது வழக்கமான ஒன்றுதான்.

இதனிடையே இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி வசிம் கான், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்கவில்லையென்றால், இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணி பங்கேற்காது என்று சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், “ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெறும்” என்றார்.

இதையும் படிங்க: மெக்சிகன் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய நடால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.