வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற நான்கு டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி நான்குப் போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கயானாவில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷாஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதமடித்து இந்திய அணியை வலுப்பெறச் செய்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி சார்பில் வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது.
-
Anuja Patil, with a remarkable 2/3, leads another fantastic performance by the Indian spinners to keep West Indies to 73/7 and complete a crushing 61-run win.
— ICC (@ICC) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India have swept the series 5-0 🙌
SCORECARD ⬇️ https://t.co/jKlTD8Iyzd pic.twitter.com/xGcDiOeyvw
">Anuja Patil, with a remarkable 2/3, leads another fantastic performance by the Indian spinners to keep West Indies to 73/7 and complete a crushing 61-run win.
— ICC (@ICC) November 21, 2019
India have swept the series 5-0 🙌
SCORECARD ⬇️ https://t.co/jKlTD8Iyzd pic.twitter.com/xGcDiOeyvwAnuja Patil, with a remarkable 2/3, leads another fantastic performance by the Indian spinners to keep West Indies to 73/7 and complete a crushing 61-run win.
— ICC (@ICC) November 21, 2019
India have swept the series 5-0 🙌
SCORECARD ⬇️ https://t.co/jKlTD8Iyzd pic.twitter.com/xGcDiOeyvw
இதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அனுஜா பட்டீல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.
இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரர் மில்கா சிங் #HBDTHEFLYINGSIKH!