23 வயது உட்பட்டோருக்கான ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் மியன்மரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதில், இந்திய அணி முதல் செட்டை 21-25 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தில் கம்பேக் தந்த இந்திய அணி 25-16, 25-22, 25-18 என்ற கணக்கில் தொடர்ந்து மூன்று செட்டை போராடி வென்றது. இதனால், இந்திய அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்கொள்கிறது.