இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணி, ஐந்து ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ஏ அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணியின் முன்னணி வீரர் ஷிகர் தவான் விளையாடினார்.
மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 60 ரன்கள் அடித்து விளாசினார். இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய ஏ அணிக்கு 25 ஓவர்களில் 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, இந்திய ஏ அணி 7.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்றைய நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஷிகர் தவான் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
.@SDhawan25 departs after a well made 52.
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India A need 77 runs in 9 overs.
Live - https://t.co/gOSYIPwPwZ #IndAvSAA pic.twitter.com/145GidXKXW
">.@SDhawan25 departs after a well made 52.
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2019
India A need 77 runs in 9 overs.
Live - https://t.co/gOSYIPwPwZ #IndAvSAA pic.twitter.com/145GidXKXW.@SDhawan25 departs after a well made 52.
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2019
India A need 77 runs in 9 overs.
Live - https://t.co/gOSYIPwPwZ #IndAvSAA pic.twitter.com/145GidXKXW
இதைத்தொடர்ந்து, இன்று தொடங்கிய இப்போட்டியில், ஷிகர் தவான் அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 110 ரன்கள் எட்டிய நிலையில், ஷிகர் தவான் 52 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஷிவம் துபே 31 ரன்களில் நடையைக் கட்டியதால் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய ஏ அணி 25 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி இப்போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.