இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பைகான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா சி அணி, இந்திய ஏ அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களான மயங்க் அகர்வால், கேப்டப் சுப்மன் கில் அதிரடியாக ஆடத்தொடங்கினர்.
-
A magnificent 💯 for @mayankcricket as he continues his great run on form 👏👏 #DeodharTrophy pic.twitter.com/jcxxphCajX
— BCCI Domestic (@BCCIdomestic) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A magnificent 💯 for @mayankcricket as he continues his great run on form 👏👏 #DeodharTrophy pic.twitter.com/jcxxphCajX
— BCCI Domestic (@BCCIdomestic) November 1, 2019A magnificent 💯 for @mayankcricket as he continues his great run on form 👏👏 #DeodharTrophy pic.twitter.com/jcxxphCajX
— BCCI Domestic (@BCCIdomestic) November 1, 2019
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 96 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதன் பின் 120 ரன்களில் மயங்க் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் சுப்மன் கில் 123 பந்துகளில் சதமடித்து ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் 143 ரன்கள் அடித்து அஸ்வின் பந்துவீச்சில் ஆடமிழந்தார். அதன் பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தார். அதிரடியாக விளையாடிய யாதவ் 24 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.
-
Another centurion for India C as @RealShubmanGill brings up his 6th List A 💯
— BCCI Domestic (@BCCIdomestic) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/gvFvhTuDvs pic.twitter.com/oqlUXohhLM
">Another centurion for India C as @RealShubmanGill brings up his 6th List A 💯
— BCCI Domestic (@BCCIdomestic) November 1, 2019
Live - https://t.co/gvFvhTuDvs pic.twitter.com/oqlUXohhLMAnother centurion for India C as @RealShubmanGill brings up his 6th List A 💯
— BCCI Domestic (@BCCIdomestic) November 1, 2019
Live - https://t.co/gvFvhTuDvs pic.twitter.com/oqlUXohhLM
இதன் மூலம் இந்தியா சி அணி ஐம்பது ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 366 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் கேப்டன் ஹனுமா விஹாரி(0), அஸ்வின்(1), அபிஷேக்(2) என சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் மூலம் இந்தியா ஏ அணி 29.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சி அணி சார்பில் ஜலஜ் சக்ஸேனா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இந்தியா சி அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியானது தியோதர் கோப்பைக்கான தொடரில் ஒரு அணி அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற முதல் வெற்றியாகும்.
இதையும் படிங்க: ஒரு மனுஷன் இப்படியா விளையாடுறது... பேட்டால் இலங்கையை போட்டுப் பொளந்த வார்னர்!