அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்த இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது.
அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய இஷாந்த் சர்மாவும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஸ்டோக்ஸிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
மறுமுனையில் 96 ரன்களுடன் களத்திலிருந்த வாஷிங்டன் சுந்தர், இப்போட்டியில் சதமடிக்கும் வரை கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கிய சிராஜ் நிலைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவரும் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கிளின் போல்டாகினார்.
இதனால் வாஷிங்டன் சுந்தரின் செஞ்சுரி கனவு தகர்ந்ததுடன், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 365 ரன்களை எடுத்தது.
-
INNINGS BREAK#TeamIndia all out 365, secure a 160-run lead in the 4⃣th @Paytm #INDvENG Test! @RishabhPant17 1⃣0⃣1⃣@Sundarwashi5 9⃣6⃣*
— BCCI (@BCCI) March 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the match 👉 https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/CNcVedSZAo
">INNINGS BREAK#TeamIndia all out 365, secure a 160-run lead in the 4⃣th @Paytm #INDvENG Test! @RishabhPant17 1⃣0⃣1⃣@Sundarwashi5 9⃣6⃣*
— BCCI (@BCCI) March 6, 2021
Follow the match 👉 https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/CNcVedSZAoINNINGS BREAK#TeamIndia all out 365, secure a 160-run lead in the 4⃣th @Paytm #INDvENG Test! @RishabhPant17 1⃣0⃣1⃣@Sundarwashi5 9⃣6⃣*
— BCCI (@BCCI) March 6, 2021
Follow the match 👉 https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/CNcVedSZAo
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 101 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: அர்ஜென்டினா ஓபன்: அரையிறுதி வாய்ப்பை இழந்த சுமித் நகல்!