இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி, டோமினிக் சிப்லி ஆகியோர் அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - பென் ஸ்டோக்ஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் 28 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஒல்லி போப் தனது டிஃபென்ஸ் திறமையை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தார். மறுமுனையில் அசத்தாலாக விளையாடிவந்த பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார்.
-
R Ashwin breaks through!
— ICC (@ICC) March 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
An inside edge off the backfoot and Ollie Pope is caught at forward short leg for 29 ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/k4ZENKI8pB
">R Ashwin breaks through!
— ICC (@ICC) March 4, 2021
An inside edge off the backfoot and Ollie Pope is caught at forward short leg for 29 ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/k4ZENKI8pBR Ashwin breaks through!
— ICC (@ICC) March 4, 2021
An inside edge off the backfoot and Ollie Pope is caught at forward short leg for 29 ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/k4ZENKI8pB
பின்னர் 55 ரன்களில் ஸ்டோக்ஸ் நடையைக் கட்ட, அடுத்து ஒல்லி போப் 29 ரன்களிலும், பென் ஃபோக்ஸ் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அக்சர் பட்டேலின் சுழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவுக்கு முன்னதாகவே இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவுசெய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களை எடுத்தார்.
-
☝️ Dan Lawrence
— ICC (@ICC) March 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
☝️ Dom Bess
Axar Patel strikes twice in one over, reducing England to 189/9.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/Gcvr1qajcY
">☝️ Dan Lawrence
— ICC (@ICC) March 4, 2021
☝️ Dom Bess
Axar Patel strikes twice in one over, reducing England to 189/9.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/Gcvr1qajcY☝️ Dan Lawrence
— ICC (@ICC) March 4, 2021
☝️ Dom Bess
Axar Patel strikes twice in one over, reducing England to 189/9.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/Gcvr1qajcY
இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: அர்ஜெண்டினா ஓபன்: காலிறுதிச்சுற்றில் சுமித் நகல்!