ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் ஏற்கெனவே முடிந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், மற்றொன்றில் இந்தியாவும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 07) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது.
ரோஹித், சைனி அணியில்:
ஆஸ்திரேலியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மயாங்க் அகர்வாலுக்குப் பதிலாக அதிரடி வீரர் ரோஹித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய உமேஷ் யாதவிற்குப் பதிலாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மாவின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தொடக்க வீரர் சுப்மன் கில், தனது சிறப்பான ஆட்டத்தால் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நடுவரிசையில் புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த் என நட்சத்திர வீரர்கள் உள்ளது இந்திய அணியின் பேட்டிங்கை வலிமைப்படுத்தியுள்ளது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா இணை தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துவருகின்றன.
வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா மட்டுமே அனுபவம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது சிராஜ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இறுதியாக அறிமுக வீரர் நவ்தீப் சைனி, நாளைய போட்டியில் பும்ராவுடன் இணைந்து தொடக்க ஓவர்களை வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Final training session ahead of the 3rd Test ✅#TeamIndia #AUSvIND pic.twitter.com/I8Rp3rfTck
— BCCI (@BCCI) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Final training session ahead of the 3rd Test ✅#TeamIndia #AUSvIND pic.twitter.com/I8Rp3rfTck
— BCCI (@BCCI) January 6, 2021Final training session ahead of the 3rd Test ✅#TeamIndia #AUSvIND pic.twitter.com/I8Rp3rfTck
— BCCI (@BCCI) January 6, 2021
இந்திய அணி: அஜிங்கியா ரஹானே (கே), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி.
சந்தேகத்தில் வார்னர்?
மெல்போர்ன் டெஸ்டில் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, நாளைய போட்டியில் நிச்சயம் தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் நாளைய போட்டியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகத்திற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. மேலும் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து சுழற்பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிவருவது ஆஸ்திரேலியாவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் லபுசாக்னேவின் சிறப்பான ஃபார்ம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை வலிமைப்படுத்திவருகிறது. தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியின் துருப்புச்சீட்டாக வேகப்பந்து வீச்சாளர்களே இருந்துவருகின்றனர்.
மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் என வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து தங்களது அபார பந்துவீச்சால் இந்திய அணியை திணறச்செய்துள்ளனர். அதனால் இப்போட்டியிலும் வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மேத்யூ வேட், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின் (கே), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட், மார்கஸ் ஹாரிஸ், ஹென்ரிக்ஸ், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மிட்செல் ஸ்வெப்சன்.
இதையும் படிங்க: IND vs AUS: பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..!