ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை (ஜன.15) பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்னஸ் லபுசாக்னே 108 ரன்களும், டிம் பெய்ன் 50 ரன்களும் எடுத்தனர். அறிமுக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மாவும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. புஜாரா 25 ரன்களிலும், ரஹானே 38 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரிஷப் பந்த்தும் 23 ரன்களுடன் நடையை கட்டினார்.
-
Maiden Test fifty for Shardul Thakur – a brilliant knock studded with eight fours and two sixes 💥#AUSvIND | #WTC21 pic.twitter.com/Gihu3ORX6s
— ICC (@ICC) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maiden Test fifty for Shardul Thakur – a brilliant knock studded with eight fours and two sixes 💥#AUSvIND | #WTC21 pic.twitter.com/Gihu3ORX6s
— ICC (@ICC) January 17, 2021Maiden Test fifty for Shardul Thakur – a brilliant knock studded with eight fours and two sixes 💥#AUSvIND | #WTC21 pic.twitter.com/Gihu3ORX6s
— ICC (@ICC) January 17, 2021
தொடர் விக்கெட் இழப்பு காரணமாக இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா என்ற சந்தேகம் எழத்தொடங்கியது. சந்தேகத்தை போக்கும் வகையில் வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாக்கூர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷர்துல் தாக்கூர் சிக்சர் அடித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாஷிங்டன் சுந்தரும், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார்.
-
Washington Sundar joins the party 🙌
— ICC (@ICC) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A fifty on Test debut 🔥#AUSvIND pic.twitter.com/b3jSgYGART
">Washington Sundar joins the party 🙌
— ICC (@ICC) January 17, 2021
A fifty on Test debut 🔥#AUSvIND pic.twitter.com/b3jSgYGARTWashington Sundar joins the party 🙌
— ICC (@ICC) January 17, 2021
A fifty on Test debut 🔥#AUSvIND pic.twitter.com/b3jSgYGART
மேலும் இந்த இணை 7 விக்கெட் பார்ட்னர்ஷிப் முறையில் 123 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கபா கிரிக்கெட் மைதானத்தில் 7ஆவது விக்கெட்டிற்கு அதிக பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்த முதல்ஜோடி என்ற சாதனையையும் படைத்து, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அவரை தொடர்ந்து 62 ரன்களில் வாஷிங்டன் சுந்தரும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவுக்கு முன்னதாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை எடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 33 ரன்கள் பின்தங்கியும் இருந்தது.
-
India are all out for 336, just 33 runs short of Australia's first innings total. #AUSvIND scorecard: https://t.co/oDTm20rn07 pic.twitter.com/3gtFWD2heu
— ICC (@ICC) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India are all out for 336, just 33 runs short of Australia's first innings total. #AUSvIND scorecard: https://t.co/oDTm20rn07 pic.twitter.com/3gtFWD2heu
— ICC (@ICC) January 17, 2021India are all out for 336, just 33 runs short of Australia's first innings total. #AUSvIND scorecard: https://t.co/oDTm20rn07 pic.twitter.com/3gtFWD2heu
— ICC (@ICC) January 17, 2021
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 33 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்துள்ளது.
டேவிட் வார்னர் 20 ரன்களுடனும், மார்கஸ் ஹாரிஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை (ஜனவரி 18) நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இதையும் படிங்க: மும்முறை தாண்டுதலில் உலக சாதனை படைத்த ஜாங்கோ!