ETV Bharat / sports

3வது டெஸ்ட்: அறிமுகமாகும் சைனி, ரீ-என்ட்ரியாகும் ரோஹித்! - நவ்தீப் சைனி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று (ஜன. 06) அறிவிக்கப்பட்டது.

IND vs AUS: India announces playing XI against Australia

author img

By

Published : Jan 6, 2021, 2:55 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன.07) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஓராண்டிற்குப் பிறகு ரோஹித் சர்மா அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். அதேசமயம் அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "இந்திய அணியில் ரோஹித் மீண்டும் இடம்பிடித்திருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவரது அனுபவம் நிச்சயம் இப்போட்டியில் எங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இப்போட்டிக்காக அவர் கடுமையாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்" என்று தெரிவித்தார்.

இந்திய அணி: அஜிங்கியா ரஹானே (கே), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி.

இதையும் படிங்க:‘பயிற்சிக்கு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது’ - சாய்னா நேவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.