இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை எடுத்திருந்தது.
தேநீர் இடைவேளைக்கு பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி சிராஜ், ஷர்துல் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
-
First Test five-wicket haul for Mohammed Siraj 👏#AUSvIND | #WTC21 pic.twitter.com/8niDOfm2Oi
— ICC (@ICC) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">First Test five-wicket haul for Mohammed Siraj 👏#AUSvIND | #WTC21 pic.twitter.com/8niDOfm2Oi
— ICC (@ICC) January 18, 2021First Test five-wicket haul for Mohammed Siraj 👏#AUSvIND | #WTC21 pic.twitter.com/8niDOfm2Oi
— ICC (@ICC) January 18, 2021
இதில் முகமது சிராஜ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களையும், டேவிட் வார்னர் 48 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் , வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 328 ரன்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
-
Mohammed Siraj and Shardul Thakur share nine wickets between them as Australia are all out for 294.
— ICC (@ICC) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The hosts have set India a target of 328.#AUSvIND ⏩ https://t.co/oDTm209M8z pic.twitter.com/fv0fIxL7CQ
">Mohammed Siraj and Shardul Thakur share nine wickets between them as Australia are all out for 294.
— ICC (@ICC) January 18, 2021
The hosts have set India a target of 328.#AUSvIND ⏩ https://t.co/oDTm209M8z pic.twitter.com/fv0fIxL7CQMohammed Siraj and Shardul Thakur share nine wickets between them as Australia are all out for 294.
— ICC (@ICC) January 18, 2021
The hosts have set India a target of 328.#AUSvIND ⏩ https://t.co/oDTm209M8z pic.twitter.com/fv0fIxL7CQ
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோஹித் சர்மா - சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் எதிரணியின் பந்துவீச்சை தடுத்து ஆடினார்.
இப்போட்டியில் 1.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
-
Rohit Sharma and Shubman Gill take India to 4/0 at stumps before rain stops play on day four.
— ICC (@ICC) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The visitors need 324 runs to win. #AUSvIND scorecard ⏩ https://t.co/oDTm209M8z pic.twitter.com/StizY7tja0
">Rohit Sharma and Shubman Gill take India to 4/0 at stumps before rain stops play on day four.
— ICC (@ICC) January 18, 2021
The visitors need 324 runs to win. #AUSvIND scorecard ⏩ https://t.co/oDTm209M8z pic.twitter.com/StizY7tja0Rohit Sharma and Shubman Gill take India to 4/0 at stumps before rain stops play on day four.
— ICC (@ICC) January 18, 2021
The visitors need 324 runs to win. #AUSvIND scorecard ⏩ https://t.co/oDTm209M8z pic.twitter.com/StizY7tja0
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை நாளை (ஜனவரி 19) ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.
இதையும் படிங்க:ஸ்பானீஷ் சூப்பர் கோப்பை: மெஸ்ஸிக்கு ரெட் கார்டு; பட்டத்தை வென்றது அத்லெடிக் பில்பாவோ!