ETV Bharat / sports

முன்பு உலகக்கோப்பை நாயகன்; தற்போது உலக நாயகன் - ஜோகிந்தருக்கு ஐசிசி புகழாரம்! - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

கோவிட்-19 பெருந்தொற்றின் கடுமையான சூழல் நிலவிவரும் நேரத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் செயலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டியுள்ளது.

icc-salutes-joginder-sharma-for-fighting-against-covid-19

author img

By

Published : Mar 29, 2020, 10:20 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை ஆறரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவரும், தனது ஓய்வுக்குப் பின் ஹரியானா மாநிலத்தின் காவல் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்துவருபவருமான ஜோகிந்தர் சர்மா, தற்போது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

ஜோகிந்தர் சர்மாவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது. அதில், “2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் நாயகன், 2020இல் உண்மையான உலக நாயகன்.

இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா தனது கிரிக்கெட் ஓய்விற்குப் பிறகு காவல் துறையில் இணைந்து, தற்போது உலகமே சுகாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் பொதுமக்களுக்காகத் தனது பணியை மேற்கொண்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளது.

  • 2007: #T20WorldCup hero 🏆
    2020: Real world hero 💪

    In his post-cricket career as a policeman, India's Joginder Sharma is among those doing their bit amid a global health crisis.

    [📷 Joginder Sharma] pic.twitter.com/2IAAyjX3Se

    — ICC (@ICC) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சீசன் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மா வீசி, இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்றுகொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:'மக்களைவிட கிரிக்கெட் ஒன்றும் பெரிதல்ல' - ஹர்பஜன் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.