ETV Bharat / sports

மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி! - தமிழ் விளையாட்டு செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை டி20 தொடருக்கான தகுதிச்சுற்று நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது.

ICC announces qualification process for 2023 Women's T20 WC

author img

By

Published : Dec 13, 2020, 5:16 PM IST

தென் ஆப்பிரிக்காவில் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்ற அறிவிப்பையும் ஐசிசி வெளியிட்டது.

மேலும் 2021 நவம்பர் 30ஆம் தேதி கணக்கின்படி ஐசிசியின் தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் என்று ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

மேலும் மீதமுள்ள இரண்டு அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறும் என்றும், 37 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச்சுற்று தொடரிலிருந்து இரண்டு அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி பூடான், மியான்மர், பிலிப்பைன்ஸ், துருக்கி, கேமரூன் ஆகிய அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் அணிகள் 2012ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஐசிசி தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து பாபர் அசாம் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.