இந்தியா, தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (மார்ச் 20) லக்னோவில் நடைபெறுகிறது. முன்னதாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-4 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், டி20 தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டனும், அதிரடி வீராங்கனையுமான ஹர்மன்பிரீத் கவுர், காயம் காரணமாக முதலாவது டி20 போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும் முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்மிருதி மந்தானா, 'தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது போட்டியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் அவரது காயம் குறித்த முழுமையான தகவல்களை மருத்துவ குழு, அணி நிர்வாகத்தினர் வழங்குவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தானா (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ராட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஹார்லீன் தியோல், சுஷ்மா வெர்மா,நுஜாத் பர்வீன், ஆயுஷி சோனி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், மான்சி ஜோஷி, மோனிகா படேல், பிரதியுஷா, சிம்ரான் தில் பகதூர்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் எனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன் - பவானி தேவி