கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தற்போது இந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும், கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
காரணம், ஆகஸ்ட் 22ஆம் தேதியே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் பயனிக்கவில்லை.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற பயிற்சி போட்டிக்கு அவர் வரவில்லை. இதனால் ஹர்பஜன் சிங்கும் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஹர்பஜன் சிங் செப்டம்பர் முதல் வாரத்தில் இங்கு வருவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் தொடரிலிருந்து விலகுவதாக எங்களிடம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
அப்படி அவர் தெரிவித்திருந்தால் நங்கள் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்போம் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். மேலும் அவருடைய வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ என்றார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே அணியை சேர்ந்தவர்களுக்கு கரோனா நெகட்டிவ் என தகவல்