உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததிலிருந்து இந்திய வீரர் தோனி இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். தற்போது நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இவர் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. உலகக்கோப்பை தொடரின்போது தொடங்கிய அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் தற்போதுவரை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துவந்தாலும், தனது ஓய்வு குறித்து தோனி இன்னும் மெளனம் காத்துவருகிறார்.
இதனிடையே, பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி, தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினரிடமும், இந்திய அணியின் கேப்டன் கோலியிடமும் பேசப்போதவாக அறிவித்திருந்தார். ராஞ்சியில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.
இப்போட்டி முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலியிடம் நிருபர் ஒருவர், ‘தோனியின் எதிர்காலம் குறித்து கங்குலி உங்களிடம் எதுவும் பேசினாரா?’ என்ற கேள்வியை கேட்டார். அதற்கு கோலி, "கங்குலி பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பானது. இதற்காக நான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ஆனால், தோனியின் எதிர்காலம் குறித்து அவர் இன்னும் என்னிடம் பேசவில்லை. அவர் என்னை அழைத்தால் நான் நிச்சயம் அவரை சந்தித்து இது குறித்து பேசுவேன். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்" என பதிலளித்தார்.
-
Reporter: When in Ranchi, a visit to the local boy's crib beckons? 🤔🤔
— BCCI (@BCCI) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Virat: Be our guest 😉😁 #TeamIndia #INDvSA pic.twitter.com/HLdDYX3Pxn
">Reporter: When in Ranchi, a visit to the local boy's crib beckons? 🤔🤔
— BCCI (@BCCI) October 22, 2019
Virat: Be our guest 😉😁 #TeamIndia #INDvSA pic.twitter.com/HLdDYX3PxnReporter: When in Ranchi, a visit to the local boy's crib beckons? 🤔🤔
— BCCI (@BCCI) October 22, 2019
Virat: Be our guest 😉😁 #TeamIndia #INDvSA pic.twitter.com/HLdDYX3Pxn
பிசிசிஐ தலைவராக இன்று பதவியேற்கும் கங்குலி, நாளை இந்திய அணியின் தேர்வுக்குழுவினர், கேப்டன் கோலி ஆகியோருடன் தோனி குறித்து பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தோனி குறித்த கேள்விக்கு, ‘தோனி இங்கேதான் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கிறார். நீங்கள் வேண்டுமானால், வந்து ஹலோ சொல்லுங்களேன்’ என கோலி அளித்த பதில் செய்தியாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'தோனி செய்ததை நானும் செய்வேன்' - விராட் கோலி உறுதி