ETV Bharat / sports

டி20 போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம்: கவுதம் கம்பீர் - ஐபிஎல் 2020

டெல்லி: டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

gambhir-feels-experience-of-international-cricket-is-not-necessary-to-be-successful-t20-batting-coach

author img

By

Published : May 20, 2020, 11:08 PM IST

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், எப்போதும் வெளிப்படையான விமர்சனங்களைக் கூறுவதால், இவர் பேச்சுகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும். இந்நிலையில், டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என ஆலோசனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ''டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனியாக ஒரு பயிற்சியாளரை நியமிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் ஆடாத வீரரால், நல்ல பயிற்சியாளராக இருக்க முடியாது என்பதில் உண்மையில்லை. பெரிய அளவில் சர்வதேச கிரிக்கெட் ஆடவில்லை என்றாலும் வெற்றிகரமான பயிற்சியாளராக வலம் வர முடியும்.

எந்தவொரு பயிற்சியாளரும் வீரர்களுக்கு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டையோ, லேப் ஷாட்டையோ இப்படி அடிக்க வேண்டும் என பயிற்சியளிக்க மாட்டார்கள். அவ்வாறு பயிற்சியளித்தால், அது வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு பயிற்சியாளரின் வேலை என்பது வீரர்களின் மனநிலையை சமமாக வைத்துக்கொள்வதோடு, பெரிய ஷாட்களை ஆட வைத்து இலக்கை அடைய வைப்பது மட்டுமே. அதற்கு அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. என்னைப் பொறுத்தவரை தேர்வாளர்கள் அதிக போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பயிற்சியாளர்களுக்கு அது தேவையில்லை'' என்றார்.

இதையும் படிங்க: 'சும்மா கிழி' தோனி குறித்த காணொலியை வெளியிட்ட சிஎஸ்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.