தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி தலா மூன்று போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட டூப்ளஸிஸ், அன்ரிச் நார்டே, ரபாடா ஆகியோர் இந்தத் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள், டி20 போட்டிக்கான கேப்டன்ஷிப் பதவியிலிருந்து டூப்ளஸிஸ் விலகினார். இதனால், மூன்று விதமான போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி முழு நேர கேப்டனாக டி காக் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி ஜோகனஸ்பர்கில் நடைபெறவுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி: டி காக் (கேப்டன்), டெம்பா பவுமா, டூப்ளஸிஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வான்டர் டுசேன், பைட் வன் பில்ஜான், டுவைன் பெட்ரோசியஸ், அன்டில் ஃபெலுக்வாயோ, ஜே.ஜே. ஸ்மடஸ், ககிசோ ரபடா, ஷாம்சி, லுங்கி இங்கிடி, ஜார்ன் ஃபொர்டியூன், அன்ரிச் நார்டே, டேல் ஸ்டெயின்
இதையும் படிங்க: இந்த வீரனுக்காகதான் உலகமே ஏங்குகிறது! HBD AB De Villiers