ETV Bharat / sports

‘ஸ்மித்திற்கு பந்துவீசுவது மிக கடினம்’ - நவ்தீப் சைனி - விராட் கோலி

ஆஸ்திரேலியா தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்துவீச மிகவும் கஷ்டப்பட்டேன் என இந்திய அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, ஈடிவி பாரத்துடனான பிரத்யேக உரையாடலில் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE INTERVIEW: How Navdeep shone bright in India's victory over Australia

author img

By

Published : Jan 24, 2021, 7:57 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைந்தது. முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையிலும் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி அசத்தினர். இதனை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட நவ்தீப் சைனி ஈடிவி பார்த்துடனான பிரத்யேக உரையாடலில் கலந்து கொண்டு பேசினார். அவரது உரையாடல் இதோ....

கேள்வி: உங்களது காயத்தின் நிலை குறித்து கூறுங்கள்?

சைனி: எனது காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவுள்ளேன். அங்கு சென்ற பின்னர் தான் காயத்தின் தீவிரம் குறித்து கூறமுடியும்.

கேள்வி: விராட் கோலி ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் இருந்த சூழ்நிலை என்ன?

சைனி: நாங்கள் ஒரு அணியாக விளையாடுவதால், எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. நாங்கள் ஒரு போட்டிக்குச் செல்லும்போது, எங்களிடம் 11 வீரர்கள் உள்ளனர். அந்த போட்டிகளில் செயல்திறன் மிகவும் முக்கியமானது. எனவே விராட் கோலி விடுப்பு எடுத்தபோது, அவர் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். ஒவ்வொரு போட்டியிலும் 110 விழுக்காடு உழைப்பை கொடு, அது உனக்கு நிச்சயம் உதவி செய்யும். போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல் உனது ஆட்டத்தை வெளிப்படுத்து என அறிவுறுத்தினார்.

கேள்வி: மூத்த வீரர்கள் இல்லாமல் விளையாடியது எப்படி இருந்தது?

சைனி: போட்டிகளின் போது அணியின் மூத்த வீரர்கள் காயமடைவது இயல்பான ஒன்று தான். இதில் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். ஆனால் இத்தொடருக்கு முன்னதாகவே நாங்கள் அணியின் மூத்த பந்துவீச்சாளர்களிடம் ஆலோசனைகளை பெற்றோம். அவர்கள், போட்டிகளுக்கு எப்படி தயாராவது, சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது, போட்டியை கணிப்பது போன்ற பல அறிவுரைகளை எங்களுக்கு வழங்கினர். அதனால் இத்தொடரின் போது நாங்கள் மூத்த வீரர்களின் ஆலோசனை படியே ஆட்டத்தை விளையாடினோம்.

கேள்வி: இத்தொடரில் உங்களது மிக சிறந்த தருணம் எது?=

சைனி: இத்தொடரில் பங்கேற்றதே எனது வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றேன், பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்காக அறிமுகமானேன். இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியுமா என்ன. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த அணிக்கு எதிராக நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன்.

கேள்வி: ஷர்துலின் பேட்டிங் திறனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சைனி: அவர் டெஸ்ட்டில் அரைசதமடித்தார். இதனால் அவர் நிச்சயம் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என நினைக்கிறேன். நானும் அவரிடமிருந்து பேட்டிங் குறித்த நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: ஸ்டீவ் ஸ்மித்துக்கு பந்து வீசுவது எப்படி இருந்தது?

சைனி: எனது அறிமுக போட்டியிலேயே ஸ்மித் போன்ற ஒரு வீரருக்கு பந்துவீசிய நல்ல அனுபவமாக இருந்தது. இருப்பினும் அவருக்கு பந்துவீசுவது அவ்வளவு எளிதல்ல. அதனால் அணியின் மூத்த வீரர்களின் அறிவுரைப் படி ஸ்மித்திற்கு பந்துவீசினேன்.

கேள்வி: இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்துவிட்டதால், உங்களது அடுத்த திட்டம் என்ன?

சைனி: இப்போதைக்கு, நான் எனது குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன். நான் வரவிருக்கும் தொடரில் இருப்பேனா? இல்லையா? என்பது தெரியாது. ஆனாலும் நான் எனது பயிற்சியை தொடர்வேன்.

கேள்வி: இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சைனி: டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவேன் என நம்புகிறேன். ஆனால் அதுபற்றி நான் தற்போது சிந்திக்கவில்லை. ஏனெனில் அதற்கு முன்னதாக வரும் தொடர்களில் நான் சிறப்பாக செயல்படவேண்டுமென நினைக்கிறேன். மேலும் ஐபிஎல் தொடரும் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதனால் உலகக்கோப்பை தொடர் குறித்து சிந்திக்க போதிய நேரம் இருக்கிறது.

இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் கரோலினா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.