சமீப காலமாக இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கியவர் கேஎல் ராகுல். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார்.
ஆனால் அப்போட்டியில் சிறிதும் மாற்றமின்றி தனது அதிரடி ஆட்டத்தால் 80 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மட்டுமில்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
போட்டி முடிவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்திந்த ராகுல், "ஒவ்வொரு முறையும் நான் வித்தியாசமான வரிசையில் களமிறங்குவது எனக்குப் பிடித்துள்ளது. மேலும் எந்த வரிசையில் நான் களமிறங்கினாலும் எனது திறமை குறையப்போவதில்லை. அதனால் இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். ஏனேனில் ரிஷப் பந்தின் மோசமான ஆட்டத்தின் காரணமாக பலரும் இந்திய தேர்வு குழுவை சாடியுள்ள நிலையில், ராகுல் தற்போது பேட்டிங், கீப்பிங் என இரு பிரிவிலும் அசத்தி வருவதால் இனி வரும் போட்டிகளில் இவரே இந்திய அணியின் கீப்பராகவும் செயல்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு நன்றி கூறிய ஆஸ்திரேலிய ஹாக்கி சம்மேளனம்!