தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணியும் இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்ற நிலையில், நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபேத் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியின் மூலம், அந்நிய மண்ணில் 500ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய முதல் அணி என்ற மைல்கல் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு என்பதால் ஆரம்பக் காலத்திலிருந்து (1877) இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிகமான போட்டிகளில் விளையாடியது.
500 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 149 வெற்றிகளும் 182 தோல்விகளையும் சந்தித்துள்ளன. மேலும் 168 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இங்கிலாந்து அணிக்கு அடுத்தப்படியாக அந்நிய மண்ணில் அதிக போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா (180), தென் ஆப்பிரிக்கா (83) முறையே இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
-
STUMPS 🏏
— ICC (@ICC) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ben Stokes and Ollie Pope's unbeaten 76-run partnership helps England finish day one of the third #SAvENG Test on 224/4.
SCORECARD: https://t.co/UxUnoAx1Pm pic.twitter.com/rDkKibjYue
">STUMPS 🏏
— ICC (@ICC) January 16, 2020
Ben Stokes and Ollie Pope's unbeaten 76-run partnership helps England finish day one of the third #SAvENG Test on 224/4.
SCORECARD: https://t.co/UxUnoAx1Pm pic.twitter.com/rDkKibjYueSTUMPS 🏏
— ICC (@ICC) January 16, 2020
Ben Stokes and Ollie Pope's unbeaten 76-run partnership helps England finish day one of the third #SAvENG Test on 224/4.
SCORECARD: https://t.co/UxUnoAx1Pm pic.twitter.com/rDkKibjYue
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை எடுத்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களிலும், போப் 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை ரசிகர்களில் கவனம் ஈர்த்த சூப்பர் ரசிகை காலமானார்; பிசிசிஐ இரங்கல்!